செய்திகள்


Note: News sorted based on the date of publishing. News at the top is said to be more recently published one. 

Gudiyatam Gangai Amman
Source: Daily Thanthi
Dated: 15/05/2016

Gudiyatham Gangai Amman Festival 2016
Source: Daily Thanthi
Dated: 15/05/2016

Gudiyatham Gangai Amman Festival 2016
News Source: Daily Thanthi
Dated: 15/05/2016
Gudiyatham Gangai Amman Festival 2016
News Source: Dinakaran Newspaper 

Gudiyatham Gangai Amman Festival 2016
News Source: Dinakaran Newspaper 

நன்றி : மாலைமுரசு- நாளேடு 
குடியாத்தம் கங்கை அம்மன் திருவிழா வாணவேடிக்கை 
அனுமதி வழங்கிய தமிழக அரசு 
Year: 2016
Gudiyattam Gangai Amman Festival - Fire Crackers Issue
Tamil Nadu Government provides permission after strike.


நன்றி : தினகரன் - நாளேடு 
வேலூரிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குடியாத்தம். இங்குள்ள கங்கையம்மன் ஆலயத்தினாலும், இந்த ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் முதல் நாளன்று மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்ற கங்கையம்மன் சிரசு உற்சவத்தினாலும் இந்த ஊர் மிகப் பிரபலமான தலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் மிகப் பிரபலமான திருவிழாவாகவும் இந்த சிரசு உற்சவம் திகழ்கிறது. ஒரு காலகட்டத்தில் சோழ மன்னனான குலோத்துங்கச் சோழன், காடாக இருந்த இப்பகுதியை திருத்தி நாடாக்கி ஏராளமான மக்களை இங்கு குடியேறச் செய்ததாகவும், அதனால் இந்த ஊர் குடியேற்றம் என்றும் குடியேற்ற நல்லூர் என்றும் அழைக்கப்பட்டு மருவி தற்போது குடியாத்தம் என்று வழங்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.


மேலும், குலோத்துங்க மன்னர் இந்த ஊரை தேவதானமாக அளித்ததால் இந்த ஊருக்கு ‘‘ஜெயங்கொண்ட சதுர்வேதி மங்கலம்’’ என்ற பெயரும் உண்டு. குடியாத்தம் நகரின் ஒரு பகுதியான நெல்லூர்பேட்டையிலுள்ள ஸ்ரீ கருப்புலீஸ்வரர் ஆலயத்தில் குலோத்துங்கன் மற்றும் விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன. குடியாத்தம் நகரில் நடு நாயகமாக கங்கையம்மன் ஆலயம் கௌண்டின்ய நதியின் வடகரையில் அமைந்துள்ளது. வசிஷ்ட முனிவரின் சீடரான கௌண்டின்ய முனிவரின் தவத்தால் கங்கையே இங்கு கௌண்டின்ய நதியாக பிரவகித்ததாக தலவரலாறு குறிப்பிடுகிறது.
கௌண்டின்ய முனிவர் ஸ்ரீ கருப்புலீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகமும் உண்டு. குடியாத்தத்திற்கு அருகிலேயே பிரபலமான படவேடு ஸ்ரீ ரேணுகாதேவி அம்மனின் ஆலயம் உள்ளது. ஜமதக்னி முனிவரின் பத்தினியான ரேணுகாதேவி வழிபாடு இந்தியா முழுவதும் பரவலாக உள்ளது. ரேணுகா தேவியின் சிரசை மட்டும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து ஏராளமான பக்தர்கள் வழி பட்டு வருகின்றனர். வட மாநிலங்களிலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் ரேணுகாதேவி பல்வேறு பெயர்களில் வழிபடப்பட்டு வருகிறாள்.
குடியாத்தத்தில் எழுந்தருளி இருக்கின்ற கங்கையம்மனும் ரேணுகாதேவியின் அம்சமாகவே வழிபடப்படுகிறாள். ஆலயக் கருவறையில் கங்கையம்மன் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களோடு பின் வலக்கரத்தில் திரிசூலம், இடக்கரத்தில் டமருகம், முன் வலக்கரத்தில் குறுவாள் மற்றும் இடக்கரத்தில் கபால பாத்திரம் ஆகியவற்றோடு சாந்தமாக வெள்ளிக் கவசத்தில் எழுந்தருளியிருக்கிறாள். ஆலய வளாகத்தில் கௌண்டின்ய முனிவருக்கும், விநாயகருக்கும் தனிச் சந்நதிகள் அமைந்துள்ளன. தேவியின் சந்நதிக்கு முன்பாக தேவியின் உருவம் தாங்கிய பிர மாண்டமான திரிசூலமும் சிம்ம வாகனமும் உள்ளன.
வேனிற்காலத்தில் ஏற்படும் தட்டம்மை, சின்னம்மை போன்ற நோய்களின் தீவிரம் குறையவும் விரைவில் குணமாகவும் பக்தர்கள் கங்கையம்மனை வேண்டிக் கொண்டு ஆலயத்தில் வந்து தங்கி வழிபட்டு தல விருட்சத்தை வலம் வந்து துளசி தீர்த்தத்தை ஓர் அருமருந்தாக அருந்துகின்றனர். மேலும், குடியாத்தம் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை வராதவாறும் நல்ல ஆரோக்கியம் கிட்டவும் தேவி அருள்வதாக மக்கள் நம்புகின்றனர். இத்தலத்தில் கங்கையம்மன் திருவிழா ‘‘கெங்கையம்மன் சிரசுத் திருவிழா’’ என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் முதல் நாள் (பெரும்பாலும் மே மாதம் - 14 அல்லது 15ம் தேதி) மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழாவில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நா டகா மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். இந்த சிரசுத் திருவிழாவின் போது கங்கையம்மனின் பிர மாண்டமான சிரசு ஒரு குறிப்பிட்ட இனத்தவரால் காலங்காலமாக உருவாக்கப்படுகிறது. திருவிழா நாளன்று இந்த சிரசு மேளதாளங்களோடு, லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ 3 கி.மீ. தொலைவிலுள்ள ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இந்த சிரசை எடுக்கும் உரிமை குறிப் பிட்ட குடும்பத்தினருக்கு பரம்பரையாக அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆலயத்தில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தேவியின் உடலோடு இந்தச் சிரசு பொருத்தப்படுகிறது. இதன்மூலம் தேவி உயிர் பெற்று எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக ஐதீகம். இந்தத் திருவிழாவின் மிக முக்கியமான அம்சமாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் தேவியின் சிரசு பவனி வரும் ஊர்வலத்தில் புலி வேஷம், கரகம் போன்ற கிராமிய நடனங்களும் மேளதாளங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. இவற்றால் தேவி மகிழ்ச்சி அடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
கங்கையம்மன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்தத் திருவிழாவில் சிரசு ஊர்வலம், தேரோட்டம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய நிகழ்ச்சிகளாகும். சித்திரை 17ந்தேதி காப்புக்கட்டி வைகாசி 1ம் தேதியன்று முக்கியமான சிரசுத் திருவிழா நடைபெறுகிறது. வைகாசி முதல் தேதி என்ன கிழமையாக இருப்பினும், தேதியின் அடிப்படையில் இந்த விழா நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் பிரதான நிகழ்ச்சியான சிரசு ஊர்வலம் அதிகாலை 5 மணி அளவில் தாரணம் பேட்டையிலுள்ள முத்தியாலம்மன் ஆலயத்தில் தொடங்கி 9 மணி அளவில் கங்கை அம்மன் ஆலயத்தை அடைகிறது. 10 மணிக்கு தேவிக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சுமார் பத்து லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த சிரசு ஊர்வலத்தின்போது பக்தர்கள் தங்கள் வீட்டு வாசல்களில் சூரைத் தேங்காய்கள் உடைத்தும் அம்மனுக்கு வேண்டிக்கொண்டு சிரசுக்கு மாலைகள் அணிவித்தும் வழிபடுகின்றனர். இந்நாளில் லட்சக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. இவ்வாறு ஊர்வலமாக எடுத்து வரப்படும் சிரசு கங்கையம்மன் ஆலயத்திற்குள் கொண்டுவரப்பட்டு அங்கு தயார்நிலையிலுள்ள திருமேனியோடு பொருத்தப்பட்டவுடன் பக்தர்கள் அனைவரும் பரவசமடைந்து தேவியை மனதார வழிபடுகின்றனர்.
மணப்பேறு, மகப்பேறு வேண்டியும் நல்ல ஆரோக்கியத்திற்கும் இந்த சிரசுத் திருவிழாவின் போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேப்பிலையாடை அணிந்து, அங்கப் பிரதட்சணம் செய்கின்றனர். கோடைகாலத்தில் நடைபெறும் இந்த விழாவின்போது அம்மனுக்கு வியர்க்காமல் இருக்க விசிறி கொண்டு வீசுகின்றனர். மாலை மீண்டும் தேவியின் சிரசு கோலாகலமாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆற்று நீரில் கரைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தேவியானவள் தன் பிறந்த வீட்டிற்குத் திரும்புவதாக அமைந்த ஐதீகமாகும்.
தேவியை விசர்ஜனம் செய்த பின்னர் சுமார் மூன்று மணி நேரத்திற்கு தொடர்ந்து வாணவேடிக்கைகள் நடைபெறுகின்றன. மறுநாள் கங்கையம்மன் ஆலயத்திலிருந்து உற்சவ மூர்த்தி புஷ்ப பல்லக்கில் அமைதி யாக பவனி வருகிறாள். குடியாத்தம் நகர மக்கள் இந்த கங்கையம்மன் சிரசுத் திருவிழாவை தங்கள் வீட்டில் நடைபெறும் மங்கள நிகழ்ச்சியாகவே கொண்டாடுகின்றனர். இதில் கலந்து கொள்கின்ற பக்தர்களுக்கு நீர் மோர், கேழ்வரகுக்கூழ், தண்ணீர் என வழங்கி மகிழ்கின்றனர். 






Search Tags:
Gudiyattam Gangai Amman
Sri Gudiyattam Gangai Amman
Gudiyatham Gengaiamman
Gudiyattam Gangaiamman
Gangaiamman
Gudiyattam Gengaiamman thiruvizha
Gudiyatham Gengaiamman thiruvizha
Gudiyatham Gangai Amman Thiruvizha
Gudiyattam Gangai Amman Thiruvizha
Gudiyattam
Gudiyatham
குடியாத்தம்
குடியேற்றம்
குடியாத்தம் ஸ்ரீ கங்கையம்மன்
குடியாத்தம் கெங்கையம்மன்
குடியாத்தம் கங்கையம்மன்
குடியேற்றம் கெங்கையம்மன்
குடியேற்றம் கங்கையம்மன்
குடியேற்றம் கங்கை அம்மன்
குடியாத்தம் கெங்கை அம்மன்
Gudiyattam Sirasu Festival
Gudiyattam Thiruvizha
Gudiyatham Tiruvizha


Gudiyattam Gangai amman thiruvizha